Sarppavarkky

And now, I present to you ("இந்திய வலைக்காட்சிகளில் முதல் முறையாக...") - Lewis Carrol's Jabberwocky (can your browser handle that link?) translated to Tamil (he he, mostly தமிழாக்கம் rather than மொழிபெயர்ப்பு).

சர்ப்பவர்க்கி

மாயங் காலம் வழுவழு நெளிகள்
மேய்வெளி யெங்கும் கூர்வளை தோண்ட
நாக்காய் யாவும் பொலபொலத் திருக்க
ஷோக்காய் குருளை சீட்டியும் அடித்தே

கடிகூர் நகங்கள் நெறுமும் கடைவாய்
கொடியது சர்ப்ப வர்க்கி, கவனம்.
வனங்கொள் கிளுகிளுப் பறவை தவிர்ப்பாய்
சினங்கொள் பாண்டப் பிடிதவிர்ப் பாயே

நெடுநாள் தேடும் பகைவன் அழிக்க
கடுவாள் கையில் எடுத்தான் சிறுவன்
துந்துபி மரத்தடி ஓய்வாய் சிலநொடி
சிந்தனை ஆழ்த்திட சிலையென நின்றான்

கரட்டுக் காளை நிற்கும் களத்தில்
மிரட்டும் விழியுடன் சர்ப்ப வர்க்கி
அந்தியில் அடர்கரு மரங்களி னூடே
வந்து இரைந்து கொக்கரித் ததுவே

ஒன்று, இரண்டு! இன்னும் இரண்டு!
கடுவாள் சென்றது சளக்ச ளக்கென
கொன்றான் அதனை வென்றான் தலையை
சென்றான் நடையில் களிப்பு பெற்றே

சர்ப்ப வர்க்கியை வதம்செய் தாயா?
சிங்கக் குட்டியென் செல்வப் புதல்வன்
மையா மையா! ஜும்ப லக்கா!
ஹையா ஹக்கா வென்றா டினனே

மாயங் காலம் வழுவழு நெளிகள்
மேய்வெளி யெங்கும் கூர்வளை தோண்ட
நாக்காய் யாவும் பொலபொலத் திருக்க
ஷோக்காய் குருளை சீட்டியும் அடித்தே

பாதி வார்த்தைகள் புரியாமல் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதனால் சில விளக்கங்கள்:

இங்கு சில சொற்கள் வேறு தமிழ்ச் சொற்களிலிருந்து இயற்றப் பெற்றிருக்கின்றன. வேறு சில சொற்கள், வேறு வழியில்லாமல், Lewis Carrol உண்டாக்கிய ஆங்கில வார்த்தைகளிலிருந்து கொஞ்சம்-translate கொஞ்சம்-transliterate செய்யப்பெற்றிருக்கின்றன (தலைப்பைப் போல). வேற்றுக் கருத்துக்கள் / யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

மாயங்காலம் = மாலை+சாயங்காலம்
நாக்காய் = நாய்+காக்காய் = ஒல்லியான துடைப்பம் போன்ற ஒரு பறவை
பொலபொலத்து = பரிதாபமாய்
குருளை = சிறு விலங்கு (Ref: இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை - குறுந்தொகை, 47)
கிளுகிளுப்பறவை = Jubjub bird that lives in "perpetual passion" :)
பாண்டப்பிடி = bandersnatch
கரட்டு = கர்வம்+முரட்டு; rugged என்னும் பொருளும் உண்டு
மையா மையா = ? (Ref: வைரமுத்து)
ஜும்பலக்கா = ? (Ref: வைரமுத்து)
ஹையா ஹக்கா = ஹையா+தையா தக்கா


எல்லா தொடைகளும் நிலைமண்டில ஆசிரியப்பாக்கள் - இது சற்றே எளிதாய் இருக்கிறது. அந்த வெண்பா இருக்கே...
(Revelation of the week: "பேட்டை ராப்" சரணம் ஆசிரியப்பா விதிகளுக்குட்பட்டது).

2 comments:

  1. யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

    யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

    படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

    “வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

    வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

    ReplyDelete
  2. After a long back, I am reading Tamil. Really I am very happy while reading this post. I think that, you are a great pandit. Good work.

    ReplyDelete